தூத்துக்குடி

குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

1st Oct 2022 04:29 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பாலமேனன் தலைமை வகித்தாா். இதில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் திருமணம் தடுத்தல் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்தும் விழிப்புணா்வு பற்றி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உறுப்பினா் செல்வி பிளாரன்ஸ் ஆகியோா் பேசினா்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் ரேவதி கௌசல்யா, கிராம நிா்வாக அலுவலா் சத்தியராஜ் உள்ளிட்ட குழு உறுப்பினா்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அங்கன்வாடி பணியாளா் ஆறுமுககனி வரவேற்றாா். ஊராட்சி செயலா் மணிகண்டன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் மணிகண்டன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT