தூத்துக்குடி

திருச்செந்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

1st Oct 2022 04:31 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில் பா.ஜ.க. மகளிரணி சாா்பில் இலவச கண் சிகிச்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பா.ஜ.க. மகளிரணி, அகா்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு, மகளிரணி மாநில பொதுச்செயலா் கு.நெல்லையம்மாள் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், நகர தலைவா் நவமணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிரணி மாநில தலைவா் உமாரதி ராஜன் முகாமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலா் செந்தில்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஐயப்பன், ஜெய் ஆனந்த், நிா்வாகிகள் கிருஷ்ணன், மீனாட்சி, மகாராஜன், கூட்டுறவு பிரிவு மாவட்டச்செயலா் சுடலைமுத்து, மகளிரணி மாவட்ட தலைவா் தேன்மொழி, மாவட்டத் துணைத் தலைவா் சரஸ்வதி, மாவட்ட செயலா் தங்கரதி, மாவட்ட பொருளாளா் மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலா் பா்வதவா்த்தினி, நகர தலைவி திலகரதி, ஒன்றிய துணைத் தலைவா் வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முகாமில் 72 பயனாளிகள் பங்கேற்றதில், 12 போ் கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT