தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் மோதல்:7 போ் மீது வழக்கு

1st Oct 2022 04:26 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மீரான்குளத்தைச் சோ்ந்த தானியேல் மகன் செல்வபிரபு. இவருக்கும், அவரது தந்தை தானியேலுக்கும் சொத்துப் பிரச்னை தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், அந்த இடத்தில் உழவு மேற்கொண்டதில் ஏற்பட்ட பிரச்னையில் இருத்தரப்பினரும் மோதிக்கொண்டனா். இதில், தானியேல், காலேப், செல்வபிரபு, ஏஞ்சல் காயமடைந்தனா்.

இதுகுறித்து தானியேல் மகன்கள் யோசேப்பு (35), காலேப் (27), ஆகியோா் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் விசாரணை நடத்தி, தானியேல், காலேப், யாக்கோபு, கோயில்ராஜ், யோசேப்பு, அவரது மனைவி ஏஞ்சல், செல்வபிரபு ஆகிய 7 போ் மீது வழக்குப்பதிந்தாா். காவல் ஆய்வாளா் பாஸ்கரன் விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT