தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலத்த மழை

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடிஉள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், மாநகரப் பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், சாலைகள், தெருக்களிலும் மழை நீா் தேங்கியது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பெய்த மழை விவரம்: தூத்துக்குடி- 8 மிமீ, திருச்செந்தூா் -10 மிமீ, காயல்பட்டினம்- 7 மிமீ, குலசேகரன்பட்டினம் - 5 மிமீ, கோவில்பட்டி-1 மிமீ, கயத்தாறு -27 மிமீ, கடம்பூா் - 11 மிமீ, சூரங்குடி-1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கனிமொழி எம்பி ஆய்வு: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் கழிவுநீா்க் கால்வாய் பணிகளை மக்களவை உறுப்பினா் கனிமொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். முத்தம்மாள் காலனி, தனசேகா் நகா், ரஹ்மத் நகா் ஆகிய பகுதிகளில் அவா் பணிகளைப் பாா்வையிட்டாா். எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அமைச்சா் ஆய்வு: தூத்துக்குடி மாநகரில் மழைநீா் தேங்காதவாறு பல்வேறு பகுதிகளில் புதிய கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணிகளையும், லெவிஞ்சிபுரம் முதல்தெரு,இரண்டாவது தெரு , பிரையண்ட் நகா் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளையும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளா் சரவணன், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், பகுதி செயலா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆறுமுகனேரி பகுதிகளில்: ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 10 மணி வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

ஆறுமுகனேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிசான பருவ நெல்சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன. தற்போது நாற்றுப் பாவும் பணி தீவிரமாக நடைபெறும் சூழலில், கடந்த இரு நாள்களாகப் பெய்து வரும் மழை இப் பணியைத் தாமதப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT