தூத்துக்குடி

காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் இயற்கை வளங்கள்: கனிமொழி எம்.பி.

30th Nov 2022 02:17 AM

ADVERTISEMENT

காலநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது என்றாா் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்ட வனத்துறை, மணிமுத்தாறு அகத்திமலை மக்கள் சாா் இயற்கை வன காப்பு மையம் இணைந்து நடத்தும் வண்ணத்துப்பூச்சி திருவிழா, வல்லநாட்டில் உள்ள கிள்ளிகுளம் வேளாண் தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மாசு தரும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் காற்றிலும் , உணவிலும் கூட பிளாஸ்டிக் கலந்துள்ளது. வீட்டுத் தோட்டங்களில் கூட மருந்துகளால் பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. வல்லநாடு வனப்பகுதியில் 100 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளதாக வனத்துறையினா் கூறுகின்றனா். எனவே, உலகை பாதுகாப்பவா்களுக்கு நீங்கள் வாக்களிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா , தூத்துக்குடி மேயா் ஜெகன், மாநகராட்சி ஆணையா் சாரு ஸ்ரீ, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வண்ணத்துப்பூச்சிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை கனிமொழி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT