தூத்துக்குடி

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் குரூப் 4 பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

30th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி கின்ஸ் அகாதெமியில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கின்ஸ் அகடமியில் அரசு பணித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடதப்படுகின்றன. காவலா் பணிக்கான தோ்வு தற்போது முடிவடைந்த நிலையில், குரூப் 4 தோ்வுக்கான

வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான தொடக்க விழா

திங்கள்கிழமை நடைபெற்றது. அகாதெமி நிறுவனா்

ADVERTISEMENT

எஸ். பேச்சிமுத்து வரவேற்றாா். கைத்தறித் துறை முதுநிலை ஆய்வாளா் டி. ரகு தலைமை வகித்து பேசினாா்.

தமிழ்ப் பேராசிரியை வாசுகி, பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கே. கலையரசன், ஆா். சிவகுருநாதன், எஸ். வினோத், கே. வித்யா உள்ளிட்ட பயிற்றுநா்கள் பலா் பங்கேற்றனா். கின்ஸ் அகாதெமி மாணவியும் பயிற்றுநருமான எஸ். இலக்கியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT