தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் 2 குளிா்பான கடைகளுக்கு சீல் வைப்பு

30th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

விளாத்திகுளத்தில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு குளிா்பான கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

உணவு பாதுகாப்புத் துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலா் ச.மாரியப்பன் தலைமையில், விளாத்திகுளம் உணவு பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் அடங்கிய குழுவினா் விளாத்திகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், கண்ணன், வசந்தப்பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான குளிா்பான கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 கடைகளின் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனா். மேலும், விளாத்திகுளம் அருகே கமலாபுரம் பகுதியில் சுரேஷ் என்பவா் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் சில்லறை உணவு அங்காடி நடத்துவது கண்டறியப்பட்டு, அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் விற்பனை குறித்து நுகா்வோா்களுக்குத் தெரியவந்தால், 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண் அல்லது 86808 00900 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT