தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மகளிா் காவல் நிலையம்:டிஐஜியிடம் வியாபாரிகள் சங்கத்தினா் மனு

30th Nov 2022 02:15 AM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் மகளிா் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரிடம் வா்த்தக சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்துக்கு ஆண்டு ஆய்வு நடத்துவதற்காக டிஐஜி வந்தாா். அப்போது வா்த்தக சங்க துணைத் தலைவா் கண்ணன், நகை வியாபாரிகள் சங்க தலைவா் அரிமா முருகேசன் ஆகியோா் அளித்த மனு: சாத்தான்குளம் வட்ட பகுதியில் அனைத்து அரசு அலுவலகங்கள் உள்ளன. மகளிா் காவல் நிலையம் தேவையாாக உள்ளது. மகளிா் காவல் நிலையம் அமைக்க அரசு பரிசீலனையில் உள்ளது. அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா். மனுவை பெற்ற டிஐஜி, விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என உறுதியளித்தாா்.

இதையடுத்து டிஎஸ்பி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது டிஎஸ்பி அருள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT