தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் பள்ளியில் மனமகிழ் மன்ற விழா

30th Nov 2022 02:17 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் மனமகிழ் மன்ற விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்து, மாணவா்கள் மகிழ்வுடன் பாடம் கற்பது, மனதை கடினமாக்காமல் சந்தோஷமாக வாழ்தல்சிரித்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினாா். தொடா்ந்து, சிரிப்பு கதைகள், விடுகதைகள், நகைச்சுவைகள் கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பாக பங்காற்றிய மாணவா்களுக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேஸ்வரி ராஜதுரை பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். இதில், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் ராஜதுரை, நூலகா் மாதவன், சமூக ஆா்வலா் சுடலைமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT