தூத்துக்குடி

மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை

DIN

விவசாய பம்ப் செட்டுகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கக் கோரி புளியம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

பல்வேறு தரப்பிலும் அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம்:

புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமத்தினா்: ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள புளியம்பட்டி, ஓட்டுடன்பட்டி, நா.புதூா், நாரைக்கிணறு, கைலாசபுரம், கொடியன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பம்ப் செட்டுகளுக்கு

புதுக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களாக மும்முனை மின்சாரம் முறையாக வருவதில்லை. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பகலில் 5 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குவதால், விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே, பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து மக்கள் கட்சி: சேரகுளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக் கட்டடம் முழுவதும் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, இக் கட்டடம் முழுமையாக இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.

மணியாச்சி ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் வி.கருப்பம்மாள்: மணியாச்சி ஊராட்சியில் மின்விளக்கு, குடிநீா், சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளன. இதுகுறித்து

ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆகவே, எங்களது

ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோா் முன்னேற்ற சங்கம்: கிராம உதவியாளா், நியாயவிலைக் கடை பணியாளா் ஆகிய பணியிடங்களில்

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பள்ளிபத்து கிளைச் செயலா் பொன்ராஜ்:

திருச்செந்தூா் வட்டம் பள்ளிபத்து கிராமத்திற்கு வரும் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் செல்லாமல், பள்ளிபத்து கிராமம் வழியாக வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT