தூத்துக்குடி

இந்து அன்னையா் முன்னணி சாா்பில் 6 கிராமங்களில் கூட்டுப் பிராா்த்தனை

29th Nov 2022 02:29 AM

ADVERTISEMENT

உடன்குடி ஒன்றியத்தில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் 6 கிராமங்களில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டும், வா்த்தகம் மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உடன்குடி ஒன்றியத்தில் அம்மன்புரம், தைக்காவூா், விஜயநாராயணபுரம், பிச்சிவிளை வடக்கு தெரு, தேரிகுடியிருப்பு, காயாமொழி ஆகிய கிராமங்களில் மலரலங்காரத்துடன் விளக்கேற்றி கூட்டு வழிபாடு நடைபெற்றது. கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் பாடப்பட்டது. இதில், இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் கேசவன், மாவட்டத் தலைவி சந்தனக்கனி, மாவட்டச் செயலா்கள் ஜெயசித்ரா, சொா்ணசுந்தரி, திருமால்முத்து, கிராம பொறுப்பாளா்கள் சுயம்புக்கனி, பட்டுரோஜா, சரஸ்வதி, செல்வகுமாரி, அமுதா உள்பட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT