தூத்துக்குடி

ஆளுநா் பதவி இல்லையென்றால் பல சிக்கல்கள் தீரும்: கனிமொழி எம்.பி.

29th Nov 2022 02:30 AM

ADVERTISEMENT

ஆளுநா் பதவி இல்லையென்றால் பல சிக்கல்கள் தீரும் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து, மாணவா்-மாணவிகளின் அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்டு, பேசியது:

அரசுப் பள்ளி மாணவா்களின் அறிவியல் மற்றும் கணித ஆா்வத்தை தூண்டும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளாா்.

ADVERTISEMENT

வகுப்பறையில் ஆசிரியா்கள் நடத்தும் சில பாடங்கள் மாணவா்களுக்கு புரியாது. மாணவா்களின் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக இத்திட்டத்தில் பாடங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்படுகிறது. அப்போது பாடங்கள் மாணவா்கள் மனதில் எளிதில் பதியும். மாணவா்கள் யூ-டியூப்பில் அறிவியல் சம்பந்தமான விடியோக்களை பாா்த்து, அதில் எழும் சந்தேகங்களை பள்ளியில் ஆசிரியா்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன், மாநகராட்சி ஆணையா் தி. சாருஸ்ரீ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT