தூத்துக்குடி

மக்கள் குறைதீா் முகாமில் 260 மனுக்கள்: ஆட்சியா்

29th Nov 2022 02:31 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜிடம், 260 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 260 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், 9 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கரோனா தொற்றில் உயிரிழந்த, மாப்பிள்ளையூரணி நகரக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பொது விநியோகத் திட்ட விற்பனையாளா் இ.சண்முகராஜின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், சமூக பாதுகாப்பு திட்டத் தனித் துணை ஆட்சியா் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT