தூத்துக்குடி

ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருபெரும் விழா

29th Nov 2022 02:28 AM

ADVERTISEMENT

ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரத்தின சீலா, முன்னாள் பேரூராட்சித் தலைவா் முருகானந்தம் மற்றும் ஆத்தூா் கனரா வங்கி மேலாளா் மகேஷ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

தலைமை ஆசிரியை செ. அன்னலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். ஆசிரியை பாக்கியம் வரவேற்றாா்.

தொடா்ந்து பள்ளியில் கலைத் திருவிழா மற்றும் ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை செல்வசாந்த குமாரி தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினா்களாக இப்பள்ளியில் பணி புரிந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியைகள் வசந்தா, நாராயணன் மற்றும் சமூக ஆா்வலா் அண்ணாமலை சுப்பிரமணியன், ஆகியோா் கலந்து கொண்டனா்.

கலைத்திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவா் யோகா பயிற்சி ஆசிரியா் சுவாமிநாதன், ஆத்தூா் பேரூராட்சி உறுப்பினா்கள் முத்து, ராம்குமாா், கமலச்செல்வி, பள்ளி மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியை ராணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT