தூத்துக்குடி

ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு

29th Nov 2022 02:30 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி, ராஜபதி சிவாலயங்களில் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலையில் சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், மாலையில் சோமவார சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

நவகைலாயத் தலமான குரும்பூா் அருகே ராஜபதியில் அருள்மிகு சௌந்திரநாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.இதையொட்டி மாலையில் சுவாமி-அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில் திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT