தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

29th Nov 2022 02:30 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் திருநெல்வேலி சரக காவல் துறை டிஐஜி பிரவேஷ் குமாா் திங்கள்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட காவல் துறையின் துப்பறியும் நாய் படைப் பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு ஆகியவற்றையும், அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜி பிரவேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சம்பத், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, காவல் துறையினா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT