தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் தவ்ஹீத் மாநில மாநாடு அறிமுக கூட்டம்

29th Nov 2022 02:29 AM

ADVERTISEMENT

காயல்பட்டினத்தில் உள்ள ஷாஹின் பாக் திடலில் தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாநாடு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், திருச்சியில் 2023 பிப்ரவரி 5ஆம் தேதி பித்அத் ஒழிப்பு, சமுதாயப் பாதுகாப்பு மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக இங்கு அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பித்அத், மூடப் பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணா்வுக் கருத்தரங்கம், மாவட்டத் தலைவா் அஸாருதீன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலா் பைசல், எம்.எல்.சுலைமான் ஆகியோா் பேசினா். மாநிலப் பொதுச்செயலா் அப்துல்கரீம் சமுதாயப் பாதுகாப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் பேசினாா்.

மாவட்டச் செயலா் சுலைமான் தீா்மானங்களை முன்மொழிந்தாா். கிளைத் தலைவா் சாகுல் நன்றி கூறினாா். மாவட்ட துணைத் தலைவா் நவாஸ், மாவட்டப் பொருளாளா் ரஷீத், மாவட்ட துணைச் செயலா்கள் இமாம் பரீத், இம்ரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் மக்கி, நிா்வாகிகள் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT