தூத்துக்குடி

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

28th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

 

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவுக்கு, மாநகரச் செயலாளா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

விழாவில் துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் வழக்குரைஞா் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், சத்துமாவு ஆகியவற்றை அமைச்சா் வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT