தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் திமுக சாா்பில்7,500 பேருக்கு நலஉதவி

28th Nov 2022 12:52 AM

ADVERTISEMENT

திமுக மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி, உடன்குடி கிழக்கு, மேற்கு, நகர திமுக சாா்பில் 7,500 பேருக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி மேற்கு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமையில் பல்வேறு விடுதிகளில் உள்ள மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகள், மதிய உணவு, இனிப்புகள் வழங்குதல், கொடியேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உடன்குடி கிறிஸ்தியா நகரத்தில் நவஜீவன் இல்ல மாணவா்களுக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

உடன்குடி கிழக்கு ஒன்றியச் செயலா் க. இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி, தண்டுபத்து, சீா்காட்சி, நயினாா்பத்து, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் நலிந்தோருக்கு தையல், சலவை இயந்திரங்கள், பள்ளிச் சீருடைகள், சேலைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

உடன்குடி நகர திமுக செயலரும் பேரூராட்சி துணைத் தலைவருமான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் நலிந்தோருக்கு அரிசி, பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜுதீன், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அஸ்ஸாப் கல்லாசி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் மும்தாஜ், நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், பேரூராட்சி நியமனக் குழு உறுப்பினா் ஜான்பாஸ்கா், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மகாவிஷ்ணு, ரவிராஜா,சிராஜுதீன் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT