தூத்துக்குடி

திருவள்ளுவா் மன்ற ஆய்வுப் பொழிவு

28th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றத்தின் ஆய்வுப் பொழிவு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் மன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தொழிலதிபா் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தாா். வானரமுட்டி ஆசிரியா் பயிற்சி மைய முன்னாள் முதல்வா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். திருவள்ளுவா் மன்ற தலைவா் கருத்தப்பாண்டி, தமிழா் தம் பெருமைமிகு வாழ்வியல் என்ற தலைப்பில் ஆய்வுப் பொழிவாற்றினாா்.

உரத்த சிந்தனை வட்டத் தலைவா் சிவானந்தம், தமிழாசிரியா் முருகசரசுவதி ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், ரோட்டரி சங்கத் தலைவா் ரவிமாணிக்கம், நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான்கணேஷ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த சம்பத், திருவள்ளுவா் மன்ற தணிக்கையாளா் அந்தோணிராஜ், ஆசிரியா் பொன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிகளை மன்ற துணைத் தலைவா் திருமலை முத்துசாமி தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT