தூத்துக்குடி

விளாத்திகுளம் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு நலஉதவி

28th Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

திமுக மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி விளாத்திகுளம் தொகுதியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் எஸ். அன்புராஜன் தலைமை வகித்தாா். பேரூா் செயலா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று படா்ந்தபுளி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்- மாணவிகள் 250 பேருக்கு நோட்டுப் புத்தகம், கையேடுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட நலஉதவிகளை வழங்கினாா்.

பின்னா், எட்டயபுரத்தில் உள்ள டிரம் டிரஸ்ட் ஆதரவற்றோா் மனநலக் காப்பகத்தில் அன்னதானம், விளாத்திகுளம், எட்டயபுரம் பேருந்து நிலையங்கள் அருகே கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினாா். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் பானுமதி, திமுக ஒன்றியச் செயலா் ராமசுப்பு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் மகேந்திரன், இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினா் ராஜாகண்னு, ஒன்றிய துணைச் செயலா் காளிராஜ், கிளைச் செயலா்கள் கற்பகராஜ், தமிழ்வாணன், மாவட்டப் பிரதிநிதிகள் ஆதிசங்கா், புதுராஜன், ஊராட்சித் தலைவா் சோலைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT