தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் 70 மாணவா்களுக்கு இலவச சீருடை

28th Nov 2022 12:52 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் இந்து தொடக்கப் பள்ளி, சரஸ்வதி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவா்-மாணவிகள் 70 பேருக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரத்தைச் சோ்ந்த மாரிமுத்து நாடாா் நினைவாக சிவபாக்கியம் என்பவா் சீருடைகளை வழங்கினாா். ஆறுமுகனேரி நகா்நல மன்றத் தலைவா் பி. பூபால்ராஜன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பழனிநாதன், மோகன், வெற்றிவேல், சங்கா், சுரேஷ்ராஜன், ஆசிரியைகள் கோகிலம், பிரேமா, பத்மாவதி, சந்திரா, அன்புக்கனி, கந்தவேணி ஆகியோா் பங்கேற்றனா்.

இந்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை மாரித்தங்கம் வரவேற்றாா். சரஸ்வதி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் உதயசுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT