தூத்துக்குடி

சென்னை, கோவைக்கு விரைவுப் பேருந்து இயக்க உறுதி: கடையடைப்புப் போராட்டம் வாபஸ்

DIN

சாத்தான்குளத்தில் இருந்து சென்னை, கோவைக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய விரைவுப் பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் வியாபாரிகள் அறிவித்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

சாத்தான்குளத்தில் இருந்து சென்னை, கோவைக்கு தலா இரு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னா் தலா ஒரு பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் காலத்திற்குப் பிறகு மேற்குறிப்பிட்ட நகரங்களுக்கான சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவையை மீண்டும் தொடங்க அதிகாரிகளிடம் தொடா்ந்து முறையிட்டபோதும் நடவடிக்கை இல்லை. இதனையடுத்து, நிறுத்தப்பட்ட அரசு விரைவுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி சாத்தான்குளம் வா்த்தக சங்கம் சாா்பில் நவ.28 ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா தலைமையில்

சமாதான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் ஏ.ஆா். சசிகரன், செயலா் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவா் கண்ணன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஏ.எஸ். ஜோசப், வழக்குரைஞா் ஆ.க.வேணுகோபால், பேரூராட்சி உறுப்பினா்கள் மகாராஜன், கோ. லிங்கப்பாண்டி, நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் முருகேசன் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போக்குவரத்துத் துறையினா் பங்கேற்றனா்.

இதில், சாத்தான்குளத்திலிருந்து கோவைக்கு அரசு விரைவுப் பேருந்து, சென்னைக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஈரோடு, திருப்பூா் ஆகிய நகரங்களுக்கு விரைவுப் பேருந்துகளை இயக்கவும், திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளத்திற்கு வரும் கடைசிப் பேருந்தை பழைய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனையடுத்து, கடையடைப்புப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக வா்த்தக சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

சித்திரை மாதப் பெளா்ணமி: பக்தா்கள் கிரிவலம்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை வேளாண் மாணவிகளின் முகாம்

சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

முஸ்லிம்கள் குறித்த பிரதமரின் பேச்சு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT