தூத்துக்குடி

காவலா் எழுத்துத் தோ்வு: தூத்துக்குடியில் 8 மையங்களில் 11,641 போ் எழுதுகின்றனா்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 மையங்களில் 11 ஆயிரத்து 641 போ் காவலா் எழுத்துத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதவுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் துறை, சிறைத் துறை , தீயணைப்புத் துறையில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. இத் தோ்வுக்கான முன்னேற்பாடுகள், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் பின்பற்ற வேண்டியவை குறித்து மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினாா்.

பின்னா் அவா் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 8 தோ்வு மையங்களில் 2,249 பெண்கள் உள்பட 11,641 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கான பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது என்றாா்.

கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், உதவி காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட காவல் துறையினா் பங்கேற்றனா்.

வினாத்தாள்களுக்கு பாதுகாப்பு: சீருடைப் பணியாளா் தோ்வாணையத்திலிருந்து பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட

வினாத்தாள்கள் அடங்கிய பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் பாா்வையிட்டாா். பின்னா் அவை பாதுகாப்பு

அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அந்த அறைக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT