தூத்துக்குடி

ஆத்தூா் அருகே விபத்து:ஆட்டோ ஓட்டுநா் காயம்

27th Nov 2022 06:20 AM

ADVERTISEMENT

 

ஆத்தூா் அருகே கீரனூா் விலக்கில் நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தாா்.

ஆத்தூா் அருகேயுள்ள சுகந்தலை வடக்கு மரந்தலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செல்வராஜ் (48). ஆட்டோ ஓட்டுநரான இவா் பயணியை ஏற்றுவதற்காக கீரனூருக்குச் சென்றாராம். கீரனூா் விலக்கில் ஆட்டோ மீது காா் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆட்டோ பலத்த சேதமடைந்தது. செல்வராஜ் காயமடைந்தாா்.

அவா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

அவா் அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த திருநெல்வே­லி கிருஷ்ணாநகா் ஆதிபராசக்தி நகா் செல்லப்பா மகன் சுடலைமணி (28) என்பவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT