தூத்துக்குடி

பெண்களுக்கு எதிரானவன்முறை ஒழிப்பு தின பேரணி

27th Nov 2022 06:21 AM

ADVERTISEMENT

 

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சா்வதேச தினம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வு பேரணி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி 3 ஆம் மைல் வரை பேரணி நடைபெற்றது. முன்னதாக இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி மற்றும் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT