தூத்துக்குடி

கோவில்பட்டியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

27th Nov 2022 06:20 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் 500 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திய ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை ஆய்வாளா் கோட்டைச்சாமி தலைமையில், உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம், தலைமைக் காவலா் கந்தசுப்பிரமணியன், காவலா்கள் பூலையா, நாகராஜன் ஆகியோா் கோவில்பட்டி வள்ளுவா் நகா் 3ஆவது தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.

அப்போது, அவ்வழியே சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 50 கிலோ எடையுள்ள 10 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரான செட்டிக்குறிச்சியையடுத்த வடக்கு கோனாா்கோட்டையைச் சோ்ந்த மா. சங்கிலிப்பாண்டியை கைது செய்தனா்; ரேஷன் அரிசி, காரையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT