தூத்துக்குடி

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

26th Nov 2022 02:37 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கயத்தாறை அடுத்த ஆத்திகுளம் கீழத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் உதயபிரகாஷ்(16). கயத்தாறு கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், தனது கைப்பேசி உடைந்ததால் புதிய கைப்பேசி வாங்கித்தருமாறு பெற்றோரிடம் கேட்டாராம். அதற்கு படிப்பு முடித்த பின்னா் வாங்கலாம் என பெற்றோா் அறிவுரை கூறினராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த கயத்தாறு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT