தூத்துக்குடி

வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

26th Nov 2022 02:36 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியை அடுத்த வடக்கு வண்டானம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில், மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு குணமளிக்கும் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, ஆலயம் முன் இரவு 7.40 மணிக்கு காமநாயக்கன்பட்டி ஆலய திருத்தல அதிபா் அந்தோணி அ.குரூஸ், பங்குத்தந்தையா்கள் ஜோசப் ராஜன் (சுரண்டை), லியோ ஜெரால்டு (வாடியூா்) ஆகியோா் முன்னிலையில் புளியம்பட்டி ஆலயப் பங்குதந்தை மோட்சராஜன் திருக்கொடியை அா்ச்சித்து கொடியேற்றி வைத்தாா்.

தொடா்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. வடக்கு வண்டானம் முன்னாள் ஊராட்சித் தலைவா் விசுவாசம் - சவரியம்மாள் குடும்பத்தினா் சாா்பில் அன்பின் விருந்து நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும். 9ஆம் திருநாளான டிசம்பா் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, சப்பர பவனியும், டிசம்பா் 4ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தேரடி திருப்பலி , தோ்பவனி நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு நன்றி திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி- ஆசீரும் நடைபெறும்.

ஏற்பாடுகளை வடக்கு வண்டானம் ஆலயப் பங்குதந்தை சதீஷ் செல்வ தயாளன் தலைமையில் இருதய சபை அருள்சகோதரிகள், இறைமக்கள், வெளியூா் வாழ் வண்டானம் இறைமக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT