தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் 1,970 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

26th Nov 2022 02:37 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,970 கிலோ ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக, தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கோட்டைசாமி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துராஜன், தலைமைக் காவலா் கந்தசுப்பிரமணியன் ஆகியோா் கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெரு, பாண்டவா்மங்கலம் ஊருணிக்கு வடக்கு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 45 கிலோ எடை கொண்ட 36 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து முத்துமாரியப்பன் என்ற சின்னமாரி மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

மேலும், கடலையூா் பிரதானச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, பைக்கில் சாக்குப்பை மூலம் கடத்தி வரப்பட்ட 100 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். அதைக் கடத்தி வந்த வானரமுட்டி நடுத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிமுத்து(40) என்பவரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியில் தேநீா் கடை பின்புறம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 5 மூட்டை ரேஷன் அரிசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT