தூத்துக்குடி

சாத்தான்குளம் கூட்டுறவு சங்கத்துக்கு அமைச்சா் பாராட்டு: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பாராட்டு

26th Nov 2022 02:38 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாநில அளவில் 2ஆம் இடம் பெற்றதையொட்டி, அதன் தலைவா், நிா்வாகிகள், பணியாளா்களை மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.

இந்த கூட்டுறவுச் சங்கம் 1990-ம் ஆண்டு முதல் தொடா்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. தற்போது கடன் வழங்குதல், வைப்பு தொகை சேகரித்தல் உள்ளிட்ட அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தோ்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் சேவைக்காக மாநில அளவில் 2ஆம் இடம் பெற்றது. முதலிடத்தில் பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவு சங்கம் உள்ளது.

இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. அதில், மத்திய ஒன்றிய திமுக செயலரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பொன் முருகேசனிடம், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி கேடயம்- பரிசுகளை வழங்கினாா். அவற்றை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருண்னிடம் காண்பித்து, பொன்.முருகேசன், சங்கச் செயலா் எட்வின்தேவ ஆசிா்வாதம் உள்ளிட்டோா் வாழ்த்துப் பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT