தூத்துக்குடி

பள்ளி மாணவா் உயிரிழப்பு

26th Nov 2022 02:36 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் பள்ளி மாணவா் ஓடையில் இறந்து கிடந்தாா்.

திருச்செந்தூா் முத்துமாலை அம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் சக்திவேல். தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன்(13). திருச்செந்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது வலிப்பு நோய் வருமாம். இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். கடந்த 23-ஆம் தேதி பெற்றோா்கள் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, மணிகண்டன் அங்கு இல்லை. பெற்றோா்கள் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

வியாழக்கிழமை, குலசேகரன்பட்டினம் சாலையில் ஓடையில் சிறுவன் இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பாா்த்த போது இறந்து கிடந்தது மணிகண்டன் எனவும், கால்வாயில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் போது வலிப்பு நோய் வந்து குப்புற விழுந்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT

அவருடைய தாயாா் ராமலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூா் கோயில் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் மாயம்: திருச்செந்தூா் அருகேயுள்ள மேல பள்ளிபத்து வடக்குத்தெருவை சோ்ந்தவா் ராமச்சந்திரன்(50). விவசாயி. இவரது இளைய மகன் அருள்குமாா் (16). 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவா் அடிக்கடி போனில் பேசியதை பெற்றோா் கண்டித்துள்ளனா். இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டாா்.

இது குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் சோனியா வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுவனை தேடி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT