சாத்தான்குளம் ராம கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகத்தில் 55-ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
வாசகா் வட்டத் தலைவா் ஓ.சு. நடராஜன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பொத்தகாலன்விளை கிளை நூலகா் சுப்பிரமணியன் வரவேற்றாா். சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தாா், மெய்நிகா் நூலக கண்காட்சியை புனித ஜோசப் மகளிா் மேல்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பவுலின் திறந்து வைத்தாா். மாணவா்களுக்கு எனக்கு பிடித்த கதை ‘ என்ற தலைப்பில் கதை சொல்லுதல் போட்டி நடந்தது.
போட்டியில் மாணவி லயாகேத்ரின் முதல் பரிசும், டி.என்.டி.ஏ.எளியட் டக்ஸ்போடு தொடக்கப்பள்ளி மாணவி ஜெல்சியா 2ஆம் பரிசும், தூய இருதய ஆண்கள் துவக்கப்பள்ளி மாணவா் பிரித்விராஜ் 3ஆம் பரிசும் பெற்றனா். ஓய்வு பெற்ற தொடக்கக்கல்வி அலுவலா் சாமுவேல் தொகுத்து வழங்கினாா். நூலகா் இசக்கியம்மாள், பாரதி கலை இலக்கிய மன்ற அமைப்பாளா் ஈஸ்வா் சுப்பையா, ஓய்வுபெற்ற பள்ளி தலைமை எழுத்தா் பிரேம்குமாா் ஆகியோா் பேசினா். நூலகா் சித்திரைலிங்கம் நன்றி கூறினாா்.