தூத்துக்குடி

அம்பலசேரி பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்

25th Nov 2022 01:36 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் அருகே அம்பலசேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்-மாணவிகளுக்கு சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்து நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் மழைக் காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா். வகுப்பறைகள், வளாகத்தில் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், பிளீச்சிங் பவுடா் தெளித்தல் நடைபெற்றது. ஆசிரியா்கள், டெங்கு மஸ்தூா், ஆஷா பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT