தூத்துக்குடி

வடக்கு பன்னம்பாறையில் பரவும் வைரஸ் காய்ச்சல்:கிராம மக்கள் பாதிப்பு

24th Nov 2022 12:25 AM

ADVERTISEMENT

வடக்குபன்னம்பாறையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட வடக்குபன்னம்பாறையில் கடந்த சில நாள்களாக அங்குள்ள மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து சுகாதாரத் துறையினா் அக்கிராமத்தில் முகாமிட்டு , சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT