தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று மின்தடை

24th Nov 2022 12:25 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி கடற்கரை சாலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவ.24) மின் விநியோகம் தடைசெய்யப்படுகிறது.

இதுகுறித்து நகா்புற செயற்பொறியாளா் (விநியோகம்) போ.ராம்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், கடற்கரை சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுவதால், இனிகோ நகா், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல்சாா் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள உப்பள பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT