தூத்துக்குடி

தாமரைமொழி கோயிலில் வருஷாபிஷேகம்

24th Nov 2022 12:26 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே தாமரைமொழியில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன், சந்தனமாரியம்மன், கபிலவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் புனிதநீா் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, முத்தாரம்மன், சந்தனமாரியம்மன், கபிலவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. கோபுரக் கலசங்கள், பரிவார தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டது. சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது. இரவில் திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT