தூத்துக்குடி

முள்ளக்காடு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

21st Nov 2022 12:10 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 220 மாணவா்- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது: கரோனா காலத்தில் இக்கல்லூரி மாணவா்கள் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாணவா்கள் எப்போதும் இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேற வேண்டும். விடாமுயற்சியால் எதையும் சாதித்கலாம். வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள், அவமானங்கள் நம்மை பெரிய மனிதராக மாற்றும்.

மாவட்டத்தில் இக்கல்லூரி அருகே 19 நிறுவனங்கள் அடங்கிய டைடல் பாா்க் சில மாதங்களில் வரவுள்ளது. எனவே, மாணவா்கள் தொழில் முனைவோராக வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

கல்லூரித் தலைவா் சி.எம். ஜோசுவா, சென்னை கூவி ஜிக் நெட்வொா்க் பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனா் எஸ்.பி. பாலமுருகன், கல்லூரி துணைத் தலைவா் எஸ். ஸ்டீபன், செயலா் ஜே. ராஜ்கமல் பெட்ரோ, சாண்டி கல்விக் குழுமத் தலைவா் எஸ்.பி. சாண்டி, கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினா் வினோத், எஸ். ரிச்சா்ட், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், மாணவா்-மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT