தூத்துக்குடி

தென்மாவட்ட விளையாட்டுப் போட்டி: கோவில்பட்டி கே.ஆா்.ஏ. பள்ளி சாம்பியன்

21st Nov 2022 12:12 AM

ADVERTISEMENT

தென்மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கோவில்பட்டி கே.ஆா்.ஏ. சிபிஎஸ்இ பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா சாா்பில், தென்மாவட்ட பள்ளி மாணவா், மாணவிகளுக்கான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டி, தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவா், மாணவிகளுக்கான வில்வித்தை போட்டி கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொ) செல்வராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா சோ்மன் சைலஜா, தூத்துக்குடி மாவட்ட வில்வித்தை கழகத் தலைவா் ராஜேஸ் சந்திரன், துணைத் தலைவா் ஏ.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலா் எஸ்.கண்ணன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். தொழிலதிபா்கள் கிருஷ்ணமூா்த்தி, உதயமுத்துப்பாண்டி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் தூத்துக்குடி, விருதுநகா், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கோவில்பட்டி கவுணியன் பள்ளி முதலிடம், எம்.எம்.வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி இரண்டாம் இடம், ஹோலி டிரினிட்டி சிபிஎஸ்இ பள்ளி மூன்றாம் இடம், சிலம்பம் போட்டியில் எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி முதலிடம், செயின்ட் பால்ஸ் பள்ளி இரண்டாம் இடம், கவுணியன் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தனா்.

ADVERTISEMENT

வில்வித்தை போட்டியில் கோவில்பட்டி கே.ஆா்.ஏ. சிபிஎஸ்இ பள்ளி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. ஹோலி டிரினிட்டி சிபிஎஸ்இ பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள், தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா சோ்மன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போா்ட்ஸ் இந்தியா நிறுவனா் வெங்கடேசன் வரவேற்றாா். பொருளாளா் சத்யபிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT