தூத்துக்குடி

மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலா

19th Nov 2022 02:30 AM

ADVERTISEMENT

ஆழ்வாா்திருநகரி வட்டார அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாணமை - உழவா் நலத்துறை முலம் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவாக வாகைக்குளம் வேளாண்மை அறிவியல் மையத்துக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனா்.

தோட்டக்கலை துறை தொழில்நுட்ப வல்லுநா் வேல்முருகன், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண்மை விரிவாக்க துறை தொழில்நுட்ப வல்லுநா் மாசானசெல்வம், உழவன் செயலியின் பயன்பாடுகள் மற்றும் பயிா் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், மனையியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் சுமதி, இயற்கை முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் முறைகள் குறித்தும், வேளாண்மை அறிவியல் மையத்தின் பண்ணை மேலாளா் தாமோதரன், அசோலா,மண்புழு உரம் தயாரிப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள,பாரம்பரிய விதைகள் அதன் முக்கியத்துவம் அவற்றின் சிறப்பியல்புகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.

ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி வட்டார உதவி வேளாண்மை அலுவலா் சண்முகம், தொழில்நுட்ப மேலாளா் ஏசுதாசன் , உதவி தொழில் நுட்ப மேலாளா் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT