தூத்துக்குடி

பழையகாயல் அருகே விபத்தில் பிளஸ் 2 மாணவா் பலி

19th Nov 2022 02:27 AM

ADVERTISEMENT

பழையகாயல் அருகே வேனும், பைக்கும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில் பிளஸ் 2 மாணவ உயிரிழந்தாா்.

ஆத்தூா், கீழரதவீதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி ஜெயா(56). இவா்களது மகன் கிஷோா்(17). திருநெல்வேலி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பள்ளிக்கு தந்தையின் பைக்கில் கிஷோா் வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, தூத்துக்குடி சாலையில் பழையகாயல் ராமச்சந்திராபுரம் பகுதியில் அவரது பைக்கும், எதிரே வந்த வேனும் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமுற்ற கிஷோா், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாய் ஜெயா அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT