தூத்துக்குடி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கும் பணியை துரிதப்படுத்தும் விதமாக நடைபெற்ற கூட்டத்திற்கு, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைப்பதன் அவசியம் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தி, இம்மாத இறுதிக்குள் நூறு சதவீத இலக்கினை எய்திடும் வகையில் பணியாற்றுமாறும் களப்பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் , வட்டாட்சியா், தோ்தல் பணி தொடா்பான துறை சாா்ந்த அலுவலா்கள், களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.