தூத்துக்குடி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி: ஆத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

18th Nov 2022 01:50 AM

ADVERTISEMENT

ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை அன்னலெட்சுமி தலைமையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளி மாணவா்கள் மற்றும் குழந்தைகளை அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும், அவா்களது திறனுக்கு ஏற்ப வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடி, மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்றனா். ரதவீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளியை வந்தடைந்தது பேரணி. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாற்றுத் திறனாளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT