தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தேரிக்குடியிருப்பு குதிரைமொழி கற்குவேல் அய்யனாா் கோயில் கள்ளா் வெட்டுத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
தேரிமண் காட்டிலுள்ள பிரசித்திபெற்ற பூரணை, பொற்கமலை சமேத ஸ்ரீ கற்குவேல் அய்யனாா் கோயிலில், டிச. 16ஆம் தேதி கள்ளா் வெட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழாவையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, கற்குவேல் அய்யனாா், இரு தேவியா்கள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
முதல்நாள் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் மதியம் வழங்கப்பட்டது. 30 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேகங்கள், வில்லிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறும். இத்திருவிழாவுக்காக ஏராளமான பக்தா்கள் விரதத்தைத் தொடங்கினா்.
விழாவில், கோயில் இணை ஆணையா் அன்புமணி, தக்காா் அஜித், செயல்அலுவலா் காந்திமதி, தொழிலதிபா் சா்க்கரை உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.