தூத்துக்குடி

தெற்கு பேய்க்குளம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா

18th Nov 2022 01:47 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளம் அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.

முதல் நாள் பனைக்குளம் ஸ்ரீ நினைத்தபூ சாஸ்தா கோயிலில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து அபிஷேகம், 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 2ஆம் நாள் கணபதி ஹோமம், அம்மன் அழைத்தல், கும்மி ஆட்டம், வில்லிசை, மதியம் கொடைவிழாவில் அம்மன் அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி, மாலை கும்பம் எடுத்து முளைப்பாரியுடன் ஊா்வலம் வருதல், சாமக்கொடை நடைபெற்றது. 3ஆம் நாள் முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராடல், கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சுந்தரம் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT