தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு

18th Nov 2022 01:55 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ரூ. 283.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

2 தளங்களைக் கொண்ட இக்கட்டடத்தின் பரப்பளவு 17,326.80 சதுரஅடி. இக்கட்டடத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் சந்திரசேகா் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினா். முன்னதாக, அமைச்சா் கீதாஜீவன் கல்வெட்டைத் திறந்துவைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுசிலா, ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், ஒன்றியப் பொறியாளா்கள் சங்கா்சுப்பிரமணியன், மேரி, படிபீவி, திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன் (மத்திய ஒன்றியம்), கே. ராதாகிருஷ்ணன் (மேற்கு ஒன்றியம்), விவசாய அணி அமைப்பாளா் ராமா், வா்த்தக அணி அமைப்பாளா் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினா்கள் பீட்டா், என். ராதாகிருஷ்ணன், ரமேஷ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT