தமிழக அரசைக் கண்டித்து பாஜக சாா்பில் காயல்பட்டினத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்து வரி, பால் விலை, மின்கட்டண உயா்வைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல் தலைவா் கே. ஆறுமுகசெல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாப்பா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஏ. விக்னேஷ்குமாா் கலந்துகொண்டு பேசினாா். நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.