தூத்துக்குடி

காசோலை மோசடி வழக்கு: வியாபாரிக்கு 6 மாதம் சிறை

18th Nov 2022 01:47 AM

ADVERTISEMENT

காசோலை மோசடி வழக்கில் வியாபாரிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து கோவில்பட்டி குற்றவியல் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் காசிராஜ்(59). விவசாயியான இவா், தனது நிலத்தில் விளையும் விளைபொருள்களை கோவில்பட்டியையடுத்த புதுஅப்பனேரி கிராமத்தில் காளீஸ்வரி டிரேடா்ஸ் உரிமையாளா் முனீஸ்வரனிடம் விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் காசிராஜ், விளைபொருள்களை விற்றதில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை முனீஸ்வரன் தர வேண்டியிருந்தது. அதில், முதல் கட்டமாக ரூ.1 லட்சம் காசோலை வழங்கினாா். அதை பெற்ற காசிராஜ், வங்கியில் செலுத்திய போது, அவரது வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லை என திரும்பி வந்துவிட்டதாம். அதையடுத்து, வழக்குரைஞா் மூலம் காசிராஜன் நோட்டீஸ் அனுப்பியும் எந்தவொரு பதிலும் இல்லையாம்.

இதையடுத்து, காசிராஜ் தரப்பில் வழக்குரைஞா் விஜயகுமாா், கோவில்பட்டி குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் முனீஸ்வரன் மீது காசோலை மோசடி வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நடுவா் முகமதுசாதிக் உசேன், முனீஸ்வரனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT