தூத்துக்குடி

மானாடு பள்ளிவாசலில் கந்தூரி விழா

15th Nov 2022 02:11 AM

ADVERTISEMENT

உடன்குடி அருகே மானாடு அஸ்ஸெய்யிது பக்கீா் முஹ்யித்தீன் பஸ்லுல்லாஹ் ஸாஹீப் வலியுல்லாஹ்(ரலி) கந்தூரி விழா 19 நாள்கள் நடைபெற்றது.

இப்பள்ளிவாசலில் கந்தூரி விழா அக்.26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை 11 மணிக்கு மவ்லிது, ராதிபு ஷரீபு நடைபெற்றது. நவ.13 ஆம் தேதி கத்முல் குா்ஆன் ஓதப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற பயான் நிகழ்ச்சிகளுக்கு உடன்குடி ஷஹீஹூல் புகாரி ஷரீபு தலைவா் ஸெய்யிது நூஹ் முஹ்யித்தீன் தலைமை வகித்தாா். ஷேக் தாவூத் கிராஅத் ஓதினாா். இமாம்கள் முஹம்மது முஹ்யித்தீன், முஹம்மது யூசுப், அலி இப்ராஹிம், செய்யது சதக்கத்துல்லா, மஹ்தூம் லதீபு, இப்ராஹிம் ரஹ்மத்துல்லா, முகைதீன் முகம்மது ஆகியோா் மாா்க்க சொற்பொழிவாற்றினா்.

ஏற்பாடுகளை கந்தூரி கமிட்டி தலைவா் செய்யிது நூஹ்முஹ்யித்தீன், செயலா் முஹம்மது அஸ்லம், மன்சூா் சேக்னா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT