தூத்துக்குடி

பயிற்சி மையத் தோ்வில் மதிப்பெண் குறைவு: நீட் பயிற்சி மாணவா் தற்கொலை

15th Nov 2022 01:58 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி தனியாா் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற நீட் பயிற்சி தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தியடைந்த மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி அறிஞா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் லெனின் சங்கா் மகன் மனோ நாராயணன்(20). இவா், கோவில்பட்டியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தாராம். அந்த மையத்தில் நடைபெற்ற மாதாந்திர தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாராம். இதனால் விரக்தியடைந்த மாணவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் குடித்தாராம். அவரை மீட்டு, கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினாா். இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT